கார் விபத்தில் மாணவன் பலி: மதுபான ஆலை அதிபர் மகன் ஷாஜி மலேஷியாவில் கைது
சென்னை: சென்னையில் கார் விபத்தில் சிறுவன் மரணத்திற்கு காரணமாக வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் மதுபான ஆலை உரிமையாளர் மகன் ஷாஜி மலேஷியாவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்துவந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே கடந்த மாதம் 22ஆம் தேதி தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுபரக் ஷிதா, முனிராஜ், அமைந்தகரை சேர்ந்த ராஜாமொய்தீன், மயிலாப்பூரை சேர்ந்த மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், சிறுவன் முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் வந்த எம்.பி. டிஸ்லரீஸ் என்ற மதுபான ஆலை உரிமையாளர் புருஷோத்தமன் மகன் ஷாஜி தப்பிவிட்டார். டிரைவர் குமார் என்பவர் காரை ஓட்டியதாக அவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுவித்தனர்.
இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட டிரைவர் குமார் உண்மையில் ஷாஜியின் டிரைவர் கிடையாது என்ற தகவல் வெளியானது. புருஷோத்தமன் மகன் ஷாஜி என்பவர்தான் காரை ஓட்டியதாகவும், அவரை காப்பாற்ற, குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு வந்த தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
ஷாஜிக்கு வலைவீச்சு
இதனிடையே விபத்து நடந்த காரில் எம்.பி டிஸ்ட்லரிஸ் ஷாஜியுடன், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் நெருங்கிய உறவினர் ஒருவரும் உள்ளே இருந்துள்ளார். தலைமறைவான ஷாஜியை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலேஷியாவில் இருந்தபடியே ஷாஜி வங்கியில் பணம் எடுத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஷாஜியை கைது செய்ய இன்டர்போல் உதவியை சென்னை போலீசார் நாடினர்.
இதைத் தொடர்ந்து இன்டர்போல் போலீசார் ஷாஜியை நேற்று கைது செய்தனர். இது குறித்து உடனடியாக சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மலேஷியா சென்று ஷாஜியை சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
ரூ.345 கோடி மோசடி
இதனிடையே, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக ரூ.345 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாக மலேஷியாவில் ஷாஜி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications