தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தலித் மாணவனை தலையில் செருப்பை சுமக்க செய்து தண்டனை வழங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6அம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறுபிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார்.
இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் நிலமாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications