கோவா கூட்டத்தில் அத்வானி கலந்துக்காம போனதுக்கு கடுமையான வயித்து வலிதான் காரணமாம்!

கோவா செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக மோடி அறிவிக்கப்படுவார் என்று உறுதியானதால் அத்வானி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடல்நிலை சரியில்லை என்று கூறி இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியில் அத்வானியின் வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி மோடி பாஜகவின் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் எல்.கே.அத்வானியின் உரை ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரசியல் எதுவும் பேசாத அத்வானி, அந்த உரையில் தமக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டிருப்பதை விளக்கினார். 11 நிமிடம் ஹிந்தியில் அத்வானி ஆற்றிய உரையில், ஜெய்ப்பூரில் இருக்கும் சாத்வி பிரீதி பிரியம்வதாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டேன். கடந்த மூன்று நாட்களாக எனக்கு கடுமையான வயிற்றுக் கோளாறு காரணமாக உடல் நிலை சரியாக இல்லை. இதனால் எங்கள் கட்சியின் மிக முக்கியமான தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications