கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு எதிராக ஆபாச சி.டி.: சுப.உதயகுமார் புகார்
நெல்லை: கூடங்குளம் போராட்டக் குழுவிற்கு எதிராக வெளியான ஆபாச சிடியை வினியோகம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்கு குழு தலைவர் சுப. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் மர்ம நபர்கள் சி.டி.யை அனுப்பியுள்ளனர்.
அதில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தம் கொண்ட தொனியில் பேசுவது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. தபால் முத்திரை இல்லாமல் இந்த சி.டி. பார்சலை தபால் ஊழியர்கள் சிலரே பல பகுதிகளில் வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த சி.டி. காட்சியைப் பார்த்து போராட்டக் குழுவினர் மட்டும் இன்றி, கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சுப.உதயகுமார் நெல்லை மாவட்ட முதுநிலை தபால் கோட்ட கண்கானிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கூடங்குளம், இடிந்தகரையைச் சேர்ந்த மக்களுக்கு முத்திரை இல்லாத தபால்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்ற ஒரு கடிதத்தை எங்களுக்கும் இடிந்தகரையைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர் கொடுத்தார். அதில் எந்த தபால் நிலையத்தின் முத்திரையும் இல்லை.
ஆனால், அதில் இருந்த சி.டி.யில் எங்கள் போராட்டக்குழு நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு யாரோ அவதூறாக பேசி தயாரிக்கப்பட்ட பதிவு இடம் பெற்றுள்ளது.
தபால் அலுவலக முத்திரை இல்லாமல் அதனை விநியோகித்த தபால் ஊழியர் மீது உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த சி.டி. சம்பவம் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications