For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குகைவழிப் பாதையில் ஸ்ட்ரக்கான டெல்லி மெட்ரோ ரயில்.. பீதியில் அலறிய பயணிகள்

By Mathi
Google Oneindia Tamil News

Metro Train
டெல்லி: மெட்ரோ ரயிலை மலையென நம்பி பயணித்த டெல்லிவாசிகளுக்கு இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும்.. அதுவும் ஜஹாங்கிர்புரி- ஹூடா சிட்டி இடையேயான மார்க்கத்தில் பயணித்தவர்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பீதியை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்..

இன்று காலை ஜஹாங்கிர்புரி- ஹூடா சிட்டி இடையேயான மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கியது. காலை 9.45 மணி நேரம்.. மத்திய தலைமைச் செயலகத்துக்கும் உத்யோக் பவனுக்கும் இடையே குகைoவழிப் பாதையில் மெட்ரோ ரயில் சென்று கொண்டிருயில்ந்தது. குகையில் நடுப் பகுதியில் அப்படியே மெட்ரோ ரயில் திடீரென நின்று போனது. பொறுமை இழந்த பயணிகளுக்கு அப்போதுதான் தெரியவந்தது ரயில் ‘பிரேக் டவுன்' என்பது.. இதனால் 45 நிமிட நேரம் பீதியடைந்து அலறிய நூற்றுக்கணக்கான பயணிகளை 20 நிமிட நேரத்தில் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

பிரேக் டவுன் ஆன ரயில் கோளாறு சரி செய்யப்படும் வரை அந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மற்றொரு பாதையில் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டன.

English summary
Hundreds of commuters on Delhi Metro's Jahangirpuri-HUDA City Centre line had a harrowing experience after a train got stuck in a tunnel during rush hour on Tuesday morning for 45 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X