அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் மீது மோசடி புகார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் உள்ள காசிபுரம் ஏழாவது தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை ராயபுரம் பகுதி அதிமுக மாணவரணி தலைவராக இருந்தேன். தற்போது அந்த பதிவியில் நான் இல்லை. ஆனால் கட்சியில் உறுப்பினராக நீடிக்கின்றேன். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் என்னை அணுகி தமிழக அரசு பணியில் சேர்த்து விடுமாறு கூறினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகத்திடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மின் வாரியம் மற்றும் சில அரசு பணிகளில் சேர்த்துவிட ரூ.14 லட்ச ரூபாய் ரொக்கமாக கொடுத்தேன். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட ஆறுமுகம் தான் கூறியபடி வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இது குறித்து ஆறுமுகத்திடம் கேட்டபோது பணத்தை தர முடியாது. முடிந்தால் உன்னால் பணத்தை வாங்கிக் கொள் என கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்த ஆறமுகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆறுமுகம் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications