தருமபுரியில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை: மூவர் கைது
தர்மபுரி: தருமபுரியில் பணத்திற்காக சிறுநீரகத்தை விற்க முயன்றவரையும், தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சட்ட விரோதமாக சிறுநீராக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்துசிறுநீரக தரகராக செயல்பட்ட அய்யாவு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிராமங்களில் வறுமையில் வாடும் ஏழைகளை ஏமாற்றி சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு சிறுநீரகத்தை ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை அய்யாவு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சட்ட விரோதமாக அவர் மனித சிறுநீரகங்களை விற்பனை செய்து வந்துள்ளார். வறுமையைப் பயன்படுத்தி கிராம மக்களிடம் சிறுநீரகத்தை சட்டத்திற்கு விரோதமான பெற்றுள்ளார் அய்யாவு.
இவ்வாறு பெறப்படும் சிறுநீரகங்களை அண்டை மாநிலமாக கர்நாடகாவிற்குச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தரகர் அய்யாவு மூலம் தனது சிறு நீரகத்தை விற்பனை செய்ய முயன்றதால் அவரும் கைது செய்யப்பட்டார்.
சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் பெரியமணலியைச் சேர்ந்த மற்றொரு தரகர் ஸ்ரீநிவாசன் என்பவரையும், தருமபுரி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications