உ.பியில் இளம் பெண்ணை கிண்டல் செய்த பக்கத்து வீட்டார்: தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
லக்னௌ: உத்தபிரதேச மாநிலத்தில் தனது மகளை விமர்சித்த பக்கத்து வீட்டினரை தட்டிக்கேட்ட தாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் அருகேயுள்ள பன்னாதேவி பகுதியை சேர்ந்த பெண் கமலேஷ் துபே. இவரது இளம்வயது நாகரீக உடை அணிவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்பத்தினர் அவரை வளர்க்கும் முறை சரியில்லை என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பூலாவதி என்ற பெண் குறைகூறி வந்தார். மேலும் கமலேஷ் துபே குடும்பத்தைப் பற்றி ஊர் முழுவதும் தவறான அபிப்ராயத்தையும் அவர் பரப்பினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாத கமலேஷ் துபே, என் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போது பார்த்தாலும் கேவலமாக பேசுகிறாய்? என்று தட்டிக் கேட்டார்.
பூலாவதிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் சண்டையில் சேர்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். ஆவேசமாக ஓடிச்சென்று கமலேஷ் துபேவின் தலையில் துப்பாக்கியின் அடிக்கட்டையால் ஓங்கி தாக்கினார்.
இதில் மண்டை பிளந்த நிலையில் கமலேஷ் துபே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர். பெண்ணை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட தாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications