பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: 21ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 5ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டது. பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்டார்.
இதில் பொது பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த அபினேஷ் குமார் முதலிடம் பிடித்தார். பரணீதரன் என்பவர் 2வது இடத்தை பிடித்தார். தொழிற்பிரிவில் கவுதம் முதலிடத்தையும், ஆனந்த் மற்றும் கவுசிக் ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களையும் பெற்றனர்.
தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu பார்க்கலாம். பொறியியல் படிப்பில் முதலில் விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20ம் தேதியும் நடைபெறுகிறது. பொது கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 30ம் தேதி வரை நடக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications