என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு-சீமான் உண்ணாவிரதத்திற்கும் தடை
கடலூர்: என்.எல்.சிக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதை தடுக்க, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் பொறுப்பில் இருக்கும் நடராஜன் வெளியிட்ட உத்தரவிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி.தொழிற்சாலையின் ஐந்து சதவிகிதப் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.
நெய்வேலி கியூ பாலம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறையினர் நேற்றிரவு தெரிவித்த நிலையில், மாவட்ட முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு இந்த உத்தரவு 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் பொறுப்பில் இருக்கும் நடராஜன் வெளியிட்ட உத்தரவிட்டுள்ளார்.
சீமான் உண்ணாவிரதத்திற்கும் அனுமதி மறுப்பு
இதேபோல நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த நாம் தமிழர் தலைவர் சீமானின் போராட்டத்துக்கும் காவல்துறைஅனுமதி மறுத்துள்ளது.
என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்தும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தி நெய்வேலி புதுநகர் தெர்மல் பஸ் நிலையம் அருகே இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. மேலும், நேற்று நள்ளிரவு முதலே கடலூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன்.
ஆனால் தடையை மீறப் போவதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications