துளித் துளியாய் பனித் துளியாய்.. சென்னை மக்களின் இதயம் குளிர்விக்கும் தொடர் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பெய்த மழையால் மண்ணும், மக்கள் மனமும் குளிர்ந்து போனது.

வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலை முதலே சென்னை வானம் மப்பும் மந்தாரமுமாக டாஸ்மாக் கடை போல காணப்படுகிறது.

கத்திரி வெயில் முடிந்த கையோடு சென்னை நகரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனமே இதற்குக் காரணம். கடந்த 2 நாட்களாக புறநகர்களிலும், நகரின் பல பகுதிகளிலும் கொட்டித் தீர்த்து வருகிறது மழை.

ஜில்லென பெய்யும் மழை

ஜில்லென பெய்யும் மழை

மாலை நேரங்களிலும், இரவிலும் இந்த மழை பெய்கிறது. இதன் காரணமாக சென்னை நகரின் சீதோஷ்ணமே சுத்தமாக மாறிப் போய் விட்டது.

பகலில் லேசான வெயில்.. மாலையில் சிலுசிலு மழை

பகலில் லேசான வெயில்.. மாலையில் சிலுசிலு மழை

பகலி்ல் பெரும்பாலும் லேசான வெயில் அடிக்கிறது. சில இடங்களில் தூறல் காணப்பட்டது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்தது.

பலத்த காற்றுடன்

பலத்த காற்றுடன்

பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் மக்கள் குளிர்ச்சியடைந்தனர். இந்த மழை காரணமாக கடும் வெப்பமும், அனலும் போய் விட்டது. நகரமே ஏசி போட்டாற் போல சில்லிட்டுப் போயுள்ளது.

இந்த மழை இன்றும் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+