பீகாரில் பயணிகள் ரயில் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதல்: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Maoists attack passenger train in Bihar, 2 reportedly killed
பாட்னா: பீகார் மாநிலத்தில் தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது இன்று பிற்பகல் 1.15 மணிக்கு சுமார் 100 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ரயில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உடன் 2 கம்பெனி மத்திய ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாவோயிஸ்டுகளுடன் போராடினர்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகினர் என்று கூறப்படுகிறது. மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ரிசர்வ் படை போலீசாரின் எதிர்ப்பை தாங்க முடியாமல் மாவோயிஸ்டுகள் ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்களில் பெண் தீவிரவாதிகளும் அடக்கம்.

கடந்த மாதம் சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+