நீங்க ஏழையா, வீடு கூவம் கரையோரமா?.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு கொசுவலை ப்ரீ....!
சென்னை: கூவம் கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை இலவசமாக கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய அடையாளம் கூவம் ஆறு. ஒரு காலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஆறாகஓடிய கூவம் இன்று சாக்கடைகளின் தலைநதியாக மாறி காட்சி தருகிறது.
கூவத்தை சுத்தப்படுத்தி தேம்ஸ் போல மாற்றப் போவதாகக் கூட இடையில் பேச்சு அடிபட்டது. பிறகு அது அப்படியே மறைந்து போய் விட்டது.

ஏழை மக்களின் கலங்கரை விளக்கம்
கூவம் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அத்தனை பேரும் ஏழை, எளியவர்கள்.

பிசி சிட்டி.. வாடகையோ பிட்டி...
பயங்கர பிசியான இந்த சிட்டியில் பசியுடன் கூடிய சிட்டிசன்கள் மட்டுமல்லாமல், வாடகை கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு ஏழ்மையில் உள்ள மக்களும் அதிகம். அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்வது கூவம் நதிக்கரைதான்.

கூலி வேலைதான்
இவர்கள் அனைவருமே தினக்கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். தினசரி வேலை பார்த்து விட்டு வந்தால்தான் சாப்பாடு.

கொசுத் தொல்லை வேற
மழைக்காலங்களில் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். அதாவது கொசுத் தொல்லையால் கஷ்டப்படுகிறார்கள்.

வீட்டுக்கு ஒரு வலை
இதையடுத்து கொசுத் தொல்லையிலிருந்து கூவம் மக்களைக் காப்பாற்றுவதற்காக கொசுவலையை இலவசமாக கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

78,000 பேருக்கு
முதல்கட்டமாக 78 ஆயிரம் பேருக்கு கொசு வலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 17 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருவிக நகரில்தான் நிறையப் பேர்
கூவம் நதிக்கரையோரம் 16 நீர்வழிப்பாதைகள் உள்ளன. அங்கெல்லாம் மக்கள் குடியிருக்கின்றனர். இதில் திரு.வி.க.நகர் பகுதியில்தான் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அங்கு மட்டும் 10,801 பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பது தெரிய வந்துள்ளது.

2வது இடம் தேனாம்பேட்டைக்கு
தண்டையார் பேட்டையில் 10,462 பேரும், ராயபுரத்தில் 10,139 பேரும், தேனாம்பேட்டையில் 8,441 பேரும், திருவொற்றியூரில் 7,369 பேரும், , அம்பத்தூரில் 5,039 பேரும், அண்ணாநகரில் 1,621 பேரும் வசிக்கிறார்கள்.
இவர்களுக்கு முதல் கட்டமாக கொசுவலை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications