செல்லமாக முத்தம்... பொசுக்கென்று கடித்துக் குதறிய நாய்... அறுந்து போன எஸ்.ஐ.உதடு!
சென்னை: செல்லப் பிராணியாகவே இருந்தாலும் அதன் மன நிலை தெரியாமல் நெருங்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்... உடல் நலம் சரியில்லாமல் இருந்த தனது செல்ல நாய்க்கு முத்தம் கொடுக்கப் போன சப் இன்ஸ்பெக்டரை, அந்த நாய் சப் இன்ஸ்பெக்டரின் உதட்டிலேயே கடித்து வைத்து விட்டது. இதில் சப் இன்ஸ்பெக்டரின் உதடு அறுந்து போய் விட்டது.
செல்லப் பிராணிகள் உடல் நலத்துடன் இருக்கும்போது நாம் அதை எப்படி வேண்டுமானாலும் கொஞ்சலாம், விளையாடலாம். ஆனால் உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பார்கள். அந்த சமயத்தில், வளர்த்தவர்களாகவே இருந்தாலும் கூட அதீத எரிச்சல் ஏற்பட்டால் கடித்து வைத்து விடும்.
இப்படித்தான் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கடி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். ராஜேந்திரன், சென்னை சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர்.
இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நாய்க்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சை கொடுத்தார். பின்னர் வீட்டுக்கு வந்து நாயை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
பின்னர் பாசத்தோடு முத்தமும் கொடு்ததார். அப்போது நாய் வெடுக்கென்று ராஜேந்திரன் உதட்டில் பலமாக கடித்தது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறினார் ராஜேந்திரன். நாய் கடித்து வைத்ததில் உதட்டின் ஒரு பக்கம் அறுந்து வந்து விட்டது. ரத்தமும் கொட்டியது.
இதையடுத்து அவரை கூட்டிக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications