குட்டியை பள்ளியில் சேர்க்க, பள்ளிக்குச் சென்ற 5 காட்டுயானைகள்: வனத்துறையினர் விரட்டியடித்தனர்
வால்பாறை: இரவு நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை நாசம் செய்த 5 காட்டு யானைகளை குட்டியோடு சேர்த்து துரத்தி அடித்தனர் வனத்துறையினர்.
வால்பாறையில் வனப்பகுதியை ஒட்டி அய்யர்பாடி, புதுத்தோட்டம், அப்பர் பாரளை ஆகிய எஸ்டேட்டுகள் உள்ளன. மக்கள் குடியிருப்புகள் உள்ள இந்த எஸ்டேட் பகுதியில் கடந்த இரு நாட்களாக ஒரு குட்டியானை உள்பட 5 காட்டு யானைகள் சுற்றித்திரிந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த வனத்துறையினர், தொடர்ந்து அப்பகுதிகளைக் கண்காணித்து வந்தனர். அப்போது, யானைக்கூட்டம் ஒன்று நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அப்பர்பாடி அரசு தொடக்க பள்ளிக்குள் யானைக்கூட்டம் புகுந்தது அவர்களுக்கு தெரிய வந்தது.
பள்ளிக்குள் புகுந்த யானைக்கூட்டம் வகுப்பறைகளை இடித்து சேதப்படுத்தியதோடு, சத்துணவு கூடத்துக்குள் புகுந்து, அங்கிருந்த 110 கிலோ அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது. ஆவேசத்துடன், கதவு, ஜன்னல்களை இடித்து சேதப்படுத்தியது காட்டு யானைக் கூட்டம்.
வனத்துறையினரின் முயற்சியால் காட்டுயானைகளை குடியிருப்புக்குள் நுழையாதவாறு தடுக்கப்பட்டது. பின்னர் அவை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications