தற்கொலை கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்…. அமெரிக்க பெற்றோர்கள் கொதிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை கடிதம் எழுதி வருமாறு வீட்டுப் பாடம் கொடுத்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ளது மன்காட்டன் என்ற தனியார் பள்ளி. இங்கு ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 41,000 டாலர் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கிறது. கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பள்ளியில்தான் தற்கொலைக் கடிதம் எழுதி வருமாறு ஆசிரியர் ஒருவர் ஹோம் ஒர்க் கொடுத்துள்ளார்.
14 வயதான 9ம் கிரேடு மாணவர்கள், ஒரு புத்தகத்தில் தற்கொலை பற்றி வந்ததை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதில் சொன்ன ஆசிரியர் ஒவ்வொரு வரையும் தாங்களாகவே தற்கொலை கடிதம் எழுதச் சொல்லி கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர்கள் கொதித்துப் போய் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
ஆண்டு பல ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக கட்டி படிக்க வைத்தும் மாணவர்களுக்கு இதுபோன்ற பாடங்களை கற்பிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை ஆசிரியர், தற்கொலை கடிதம் எழுதச் சொன்னதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அது தொடர்பாக விசாரிப்பதாக கூறினார்.
இது முதல் முறையல்ல
மாணவர்களுக்கு தற்கொலை கடிதம் எழுத பயிற்சி அளிப்பது இது முதல் முறையல்ல ஏற்கனவே பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள அண்ட்டோய்ன் டெலாஃபோனட் நடுநிலைப் பள்ளிக்கூடத்தை சேர்ந்த 30 வயதான ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு தற்கொலைக் கடிதம் எழுத 2 மாதங்கள் பயிற்சி அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
உங்களுக்கு பதினெட்டு வயதாகி விட்டது. உங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். தற்போது நீங்கள் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை எழுதி வைக்க விரும்புகிறீர்கள்.
உங்கள் மீது உங்களுக்கு உண்டான வெறுப்புணர்வால் நீங்கள் விரக்தியடைந்து விட்டீர்கள். இந்த உணர்வு தோன்றியதற்கான காரணத்தையும் அதற்கு உதவிய சில சம்பவங்களையும் நீங்கள் எழுத வேண்டும் என்று எழுத கூறியிருந்தார்.
பெற்றோர்கள் கொதிப்பு
இந்த எழுத்துப் பயிற்சியை படித்த பெற்றோர்கள் கொதிப்படைந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். எதற்கும் ஒரு எல்லையுண்டு அடுத்ததாக என்ன பயிற்சி தருவீர்கள் துப்பாக்கியால் சுடப்படும் போது ஏற்படும் உணர்வுகளை விவரிக்கவும் என எழுதச் சொல்வீர்களா என்று பெற்றோர்கள் கேட்டனர்.
இதைக் கேட்ட நிர்வாகம் ஆசிரியரை விசாரணை செய்து அவரை பணியில் இருந்து நீக்கியது. தற்போது அமெரிக்காவில் இதுபோன்ற புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications