மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி, 40 பேர் மாயம்
மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் படகு ஒன்று சுமார் 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை தரம்பூரில் இருந்து சார் தீவுக்கு கிளம்பியது. படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும் காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்தது. இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணிக்கு மானிக்சக் என்ற பகுதியில் நடந்தது.
இதில் படகில் பயணம் செய்த பெண் ஒருவர் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அவர்கள் படகில் கங்கை நதியை கடந்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் இது போன்ற படகு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications