விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: ஜூலை 10க்கு தஞ்சை நீதிமன்றம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Defamation case against Vijayakanth adjourned till 10 July
தஞ்சாவூர்: தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 2012 ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி விஜயகாந்தின் பிறந்தாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு சார்பில் வழக்கில் குப்புசாமி விஜயகாந்த் மீது தஞ்சை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விஜயகாந்த் கடந்த 27.2.2013 அன்று தஞ்சை மாவட்ட நீதி மன்றத்திற்கு வந்து நேரில் ஆஜரானார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று ஜூன் 14-ந்தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதி மன்ற நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், விஜயகாந்த் ஆஜராகாத விபரங்களையும், வழக்கை ஒத்தி வைக்கக்கோரியும் எழுத்து பூர்வமாக மனு மூலம் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து விஜயகாந்த் மீதான வழக்கு வரும் ஜூலை 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்தும், அன்று விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி சேது மாதவன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+