கொச்சி பகவதி அம்மன் கோவிலில் 85 கிலோ கதளி பழத்தை துலாபாரமாக கொடுத்த ஸ்ரீசாந்த்!
Subscribe to Oneindia Tamil
கொச்சி: ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கொச்சி பகவதி அம்மன் கோவிலில் துலாபாரம் செலுத்தினார்.

ஐ.பி.எல். பிக்ஸிங்கில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த்துக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்தார். கொச்சி அருகே திருப்பணித்துறையில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று அவர் குடும்பத்தினருடன் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த ஸ்ரீசாந்த் தமது எடைக்கு சமமான 85 கிலோ கதளி பழத்தை துலாபாரமாக செலுத்தினார்.
ஸ்ரீசாந்துடன் அவரது தந்தை சாந்தகுமாரன் நாயர், தாயார் சாவித்ரி, சகோதரன் தீபு, சகோதரி திவ்யா ஆகியோர் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications