பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!

கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு சங்கரன்கோவில், கழுகுமலை, சிவகாமிபுரம், வலசை, இடைசெவல், வில்லேசேரி, நாலாட்டின்புதூர், கடலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மல்லிகை, சம்பங்கி, பி்ச்சி, கனகம்பரம், சேவல்பூ போன்ற பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இப்பகுதியில் தற்போது பூக்கள் விளைசசல அதிகமாக இருப்பதால் பூ மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவில் பூக்கள் வந்து குவிய துவங்கியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி பூ மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.400 வரை விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது ரூ.70க்கு விற்கப்படுகிறது. இதே போல் மஞ்சள் கேந்தி ரூ.100லிருந்து 50, சம்பங்கி ரூ.400 லிருந்து ரூ.20, கனகம்பரம் ரூ.700லிருந்து ரூ.150, சேவல்பூ ரூ,.80லிருந்து ரூ.20 ஆக விலை குறைந்துள்ளது.
பூக்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளதால் இதனை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது திருமணம், கோயில் திருவிழா, விசேஷம் போன்ற நாட்கள் இல்லாததாலும், பலமான காற்று வீசுவதால் பூக்கள் செடிகளில் இருந்து உதிர்வதாலும் விலை கடுமையாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், பூக்களின் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications