பெண் எம்.எல்.ஏவுக்கு சட்டசபையில் வளைகாப்பு.... ஆந்திராவில் கலகலப்பு

Subscribe to Oneindia Tamil

Chandravathi
ஹைதராபாத்: ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சந்திராவதிக்கு சட்டசபையில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சந்திராவதி. இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவர் சாப்ட்வேர் என்ஜீனியரான ராவெல்லா சுரேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் சந்திராவதி. இவரது திருமணம் கம்மத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

சந்திராவதி டாக்டருக்குப் படித்தவர் ஆவார். படிப்பை முடித்ததும் அரசியலில் இணைந்தார். முதல் தேர்தலிலேயே கம்மம் மாவட்டம் வைரா தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்திராவதி கர்ப்பமுற்றார். பெற்றோர், சந்திராவதியுடன் சமரசமாக போகாமல் இன்னும் முறைத்துக் கொண்டிருப்பதால், சந்திராவதிக்குச் செய்ய வேண்டிய வளைகாப்பு சம்பிரதாயத்தை சட்டசபையில் எம்.எல்.ஏக்களே கூடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்து சந்திராவதி நெகிழ்ந்து போனார்.

அதன்படி சட்டசபை வளாகத்தில் பெண் எம்.எல்.ஏக்கள் திரண்டு சந்திராவதிக்கு வளைகாப்பு நடத்தி கலகலப்பாக்கினர். பலரும் அதில் கலந்து கொண்டு பல்வேறு வகை சீர்வரிசைகளை சந்திராவதிக்கு அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+