கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு அபாயம்!
நாகர்கோவில்: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சாரல் மழையுடன் சேர்ந்து குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தட்பவெப்ப நிலை மாறியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது.
குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளான முஞ்சிறை, மேல்புறம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை கிராமங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என சுகாதாரத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
