குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (30). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக குவைத்தில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். இதேபோல், திருவாரூர் அருகேயுள்ள சித்தாம்பூரைச் சேர்ந்த தாஸ் (எ) காளிதாஸும் குவைத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சுரேஷுக்கும், காளிதாஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி குவைத் நாட்டுப் போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷ், காளிதாஸ் இருவரையும் ஜூன் 18-ஆம் தேதி தூக்கிலிடுவதாக குவைத் நாடு அறிவித்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று சுரேசின் தாயாரும், கணவரை காப்பாற்ற வேண்டும் என்று காளிதாஸின் மனைவியும் நேற்று ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
இதனையடுத்து மத்திய அரசின் துரித நடவடிக்கையினால் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை குவைத்திற்கான இந்திய தூதர் சதீஷ் மேத்தா, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதால், வார இறுதி நாளாக இருந்த போதிலும் குவைத் அரசு அதிகாரிகளைத் தாம் தொடர்பு கொண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரினோம்.
குவைத் சட்ட அமைச்சர் ஆகாஃப் உள்ளிட்டோரின் தலையீட்டின் பேரில் தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குவைத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications