நரேந்திர மோடியை புகழ்ந்ததும் நிதீஷ்குமார்தான்.. இகழ்வதும் நிதீஷ்குமார்தான்.. ஏன்?

நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது.. நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தை முன்னிறுத்தி அவர் ஒரு மதச்சார்பற்றவர் என்று கூறிக் கொண்டு 17 ஆண்டுகால கூட்டணியை முறித்த இதே ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் 2004 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்துகள் இது.."பாரதிய ஜனதா கட்சியின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். வழக்கமாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் பிராமணர் லாபியில் இருந்து தப்பியவரும் கூட...அவரை ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறிவிடுவீர்கள்... மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்... நான் அவரது ரசிகனும் கூட என்று சொன்னவர்தான் இதே நிதீஷ்குமார்.
ஆனால் பின்னர் தாமும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் தம்மை மோடியின் பரம வைரியாகவே வரித்துக் கொண்டார் நிதீஷ்குமார்...2010ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிதீஷ்குமார். ஆனால் அன்றைய நாளிதழ்களில் பீகாருக்கும் நரேந்திர மோடி வருகை தந்து நல்லாட்சி தர வேண்டும் என்று ஒரு விளம்பரம் வந்ததாலேயே அந்த விருந்தையே ரத்து செய்தார் நிதீஷ்குமார்.
நரேந்திர மோடியை மதச்சார்பற்றவர் என்று கூறுகிற இதே நிதீஷ்குமார், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். அப்படியானால் பாஜக ஆதரித்த பி.ஏ.சங்மா என்ன மதச்சார்புள்ளவரா? என்ற கேள்விக்கு இதுவரை அவரிடம் எந்த பதிலும் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி மட்டுமே மதச்சார்பின்மை என்பதை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ளதா? என்பதற்கும் நிதீஷிடம் பதில் இல்லை.. ஜனாதிபதி தேர்தலில் அம்பானி குடும்பத்தினரின் விருப்பமாக பிரணாப் நிறுத்தப்பட்டார். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளத்தை ஆட்டுவிக்கும் அம்பானி குடும்பத்து எம்.பியின் விருப்பப்படியே நிதீஷும் செயல்பட்டார் என்ற உண்மை பலருக்கும் தெரியும்தி
அத்வானி,வாஜ்பாயை புகழாரம் சூட்டுகிற நிதீஷ்குமார், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் அத்வானியின் பங்களிப்பை பற்றி ஏன் பேசுவதில்லை? 2002 குஜராத் கலவரம் மிகவு கொடூரமானது என்பதை யாரும் மறுக்கப்போவது இல்லை. ஆனால் குஜராத் கலவரத்தின் போது மத்தியில் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய்தானே.. அவர் ஏன் குஜராத் அரசைக் கலைக்கவில்லை? அவர் மீது ஏன் கோபக் கணைகள் பாய்வதில்லையே? கோத்ரா கலவரத்தைவிட பீகாரின் சேனாரி படுகொலை சம்பவம் மிகவும் கொடூரமானதே..அதை ஏன் பேசுவதில்லை..
ஒருவகையில் நரேந்திர மோடியை விமர்சித்து நிதீஷ்குமார் பேசுவதும்கூட மோடிக்குத்தான் கூடுதல் நன்மை ஏற்படுத்துகிறது. நரேந்திர மோடி ஒரு டீ விற்பனையாளரின் மகனே. தமது இளம்பிராயத்தில் டீ டம்ளர்களை கழுவியவர்தான்.. நிதீஷ் பொறியியல் பட்டம் படித்த போது அவர் கல்லூரிக்குப் போகாமல் தனித் தேர்வராக பட்டம் பெற்றவர்... இப்போதும் பதவிகள் வந்தாலும் எளிமையான மனிதராக இருக்கும் மோடியைக் கண்டு நிதீஷுக்கு என்ன பொறாமை? ஒன்றே ஒன்றுதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தம்மையும் நிதீஷ்குமார் கருதிக் கொள்வதுதான்! இதனாலேயே நேற்று வரை அவரை புகழ்ந்துதள்ளிவிட்டு இன்று வைரியாக வரிந்து கட்டுகிறார் நிதீஷ்குமார்!
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications