இலங்கை: தமிழர்கள் பகுதியில் செப்டம்பரில் தேர்தல்... அரசு அறிவிப்பு
டெல்லி: இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் செப்டம்பருக்குள் மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், அங்கு இந்திய அரசின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அந்நாட்டு அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இதன்காரணமாக, மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்டமசோதாவை கொண்டு வரவிருக்கிறது.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு செய்தித் துறை அமைச்சர் கேகெலிய ரம்புகெவல்லா கூறியுள்ளார். புதிய சட்டமசோதா மீது ஒருமித்த கருத்து ஏற்படா விட்டாலும் செப்டம்பருக்குள் தேர்தலை முடித்து விட அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே சனிக்கிழமையன்று தமிழர்களின் பகுதியான கிளிநொச்சிக்கு சென்றார். கிளிநொச்சியை கொழும்புவுடன் இணைக்கும் 153 கி.மீ. நெடுஞ்சாலையை அவர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், ‘30 ஆண்டு போரில் அழிக்கப்பட்ட எல்லாவற்றையும் மீண்டும் கொண்டு வருவோம். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நீங்கள் உணர வேண்டும்' என்று கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications