தேமுதிக வேட்பாளர் தேர்வு: விஜயகாந்த்– சுதீஷ் இடையே புகைச்சல்?
சென்னை: தேமுதிகவில் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது எழுந்த குழப்பத்தினால் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவரது மைத்துனர் சுதீஷ் இடையே புகைச்சல் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏக்கள் விக்கெட்டுகள் விழுவது கட்சியில் ஒருபுறம் அதிர்ச்சியலைகளை உருவாக்கி வரும் நிலையில் ராஜ்யசபா தேர்தல் வேறு தலைவலியை உருவாக்கிவிட்டது விஜயகாந்துக்கு.
1எம்.பி பதவிக்கு உருவாகியுள்ள போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. 23 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுகவும், 22 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள தேமுதிகவும் எம்.பி பதவியை கைப்பற்ற கடுமையாகத்தான் போரடவேண்டும்.
திமுக ஆதரவை கேட்கலையே
ராஜ்யசபா எம்.பியாக வேண்டும் என்பது சுதீஷ் கனவு. தனக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம் விஜயகாந்த் ஆதரவு கேட்கலையே என்று ஆதங்கத்தில் உள்ளார் சுதீஷ்.
ஆனால் இதை சாக்காக வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே கமிட் ஆகவேண்டுமா என்று நினைக்கிறார் விஜயகாந்த்.
கிச்சன் கேபினட்
ராஜ்யசபா தேர்தலில் திமுக ஆதரித்தால் சுதீஷ் அல்லது பிரேமலதாதான் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டு இது கட்சியில் விமர்சனத்தை கிளப்பியது. கடந்த 2007ம் தேதி ராஜ்யசபா தேர்தலின் போது திமுகவில் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அப்போது விஜயகாந்த், கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கொடுப்பதா என்று விமர்சித்தார். இதே போன்ற விமர்சனம் தனக்கு வரக்கூடாது என்று கவனமாக உள்ளார் விஜயகாந்த்.
யார் வேட்பாளர்?
இந்த சூழ்நிலையில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலத் துணைத்தலைவர் தேனி முருகேசன், ஆஸ்டின், இளங்கோவன் ஆகிய மூவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாம்.
சுதீஷ் கேட்ட சீட்
தனக்கு சீட் கொடுக்காவிட்டால் தன்னுடைய நண்பர்கள் திலீப், அல்லது ஷெரீப்புக்கு சீட் கொடுக்கலாமே என்று தனது அக்கா பிரேமலதாவிடம் கேட்டாராம் சுதீஷ். இதில் திலீப் கேப்டன் டிவி பங்குதாரார். ஷெரீப் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் உறவினராம். இது விஜயகாந்தின் கவனத்திற்கு வரவே டென்சனாகி முகம் சிவந்து போனாராம்.
நீடிக்கும் சஸ்பென்ஸ்
இதனிடையே கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தபடி தேமுதிக பொருளாளர் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து திமுக-தேமுதிக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆதரவு கேப்டனுக்கா, திமுகவிற்குதானா? யாருக்கு என்பதுதான் இறுதி வரைக்கும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications