''ஹாஹாஹாஹா''... மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 8ல் திமுக ஆர்ப்பாட்டமாம்!

இன்று காலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கூடிய இக்கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளரக்ள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜ்யசபா தேர்தல் குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜ்யசபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்கிடமான நிலையில், கனிமொழியை களத்தில் இறக்கியுள்ளது திமுக. தேமுதிக தனக்கு ஆதரவு தரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்து விட்டது.
இந்த நிலையில் திமுகவின் தீர்மானம் என்னவாக இருக்கும்என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பாராத வகையில், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை கட்சித் தலைவர் கருணாநிதியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேதுவுக்காக அறப் போராட்டம்
தி.மு.க நிர்வாக குழு உறுப்பினர்கள் மொத்தம் 168 பேர். இதில் 137 பேர் கலந்து கொண்டனர். எம்.பி., எம்.எல்.ஏக்கள் 21 பேர். இதில் 18 பேர் கலந்து கொண்டனர். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதற்கட்டமாக அடுத்த மாதம் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன அறப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டாலின் தலைமையில்
தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார். ராமநாதபுரம்- துரைமுருகன், கன்னியாகுமரி- டி.ஆர். பாலு, நெல்லை- எஸ்.பி. சற்குணபாண்டியன், சிவகங்கை- வி.பி.துரைசாமி, கடலூர்- கனிமொழி, புதுச்சேரி- டி.கே.எஸ். இளங்கோவன், காரைக்கால்-திருச்சி சிவா, புதுக்கோட்டை-ஆ.ராசா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். விடுபட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றார் கருணாநிதி.
வெற்றியை எதிர்பார்த்துதான் போட்டி
ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்துதான் போட்டியிடுகிறோம் என்றார் கருணாநிதி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக அதிமுக ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்றது குறித்து கேட்டபோது, அது அவர்கள் நிலைப்பாடு என்று பதிலளித்தார் கருணாநிதி.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications