இலங்கை சிறையில் உள்ள 57 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடும் 57 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்திய கடல் பகுதிதயில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இது பற்றி தொடர்ந்து உங்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகிறேன். எனினும், மத்திய அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவத்தில் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.
மத்திய அரசின் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 5ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 49 மீனவர்களை இலங்கை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது.
மேலும், கடந்த 15ம் தேதி 8 தமிழக மீனவர்களை கைது செய்து 12 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் செயலில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. அவர்களை பாதுகாத்து, தமிழகத்தின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மீன்பிடிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது இலங்கை சிறையில் வாடும் 57 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications