கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாத்தா-பாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவையில் இருவேறு வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த இரு வயதான வர்களின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி கவுண்டர் என்ற 76 வயது முதியவர், சில தினங்களுக்கு முன்பு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். சத்தியமங்கலத்தில உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற ரங்கசாமி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார் ரங்கசாமி. இதனை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ரங்கசாமியின் மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதைத்தொடர்ந்து ரங்கசாமி கவுண்டரின் 2 சிறுநீரகங்களும், 2 கண்களும் தானமாக பெறப்பட்டன.
அதேபோல், கோவை வடவள்ளியைச் சேர்ந்த கருணாம்பிகை என்ற 64 பெண் ஒருவர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதனைத்தொடர்ந்து கருணாம்பிகையின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் முதலியன அவர்களது உறவினர்களால் தானமாக தரப்பட்டன.
முறையாக தேவைப்படுவோருக்கு தானமாக பெறப்பட்ட இந்த உறுப்புகள் பொருத்தப்படும் என கோவை மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications