ராஜ்யசபா தேர்தல்: 1996க்குப் பிறகு முதல் முறையாக ஓட்டு போடப் போகும் எம்.எல்.ஏக்கள்!
சென்னை: ராஜ்யசபா தேரத்லில் தமிழகத்தில் 1996ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஒரு விதமான திரில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழத்தில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு அதிமுக சார்பில் ஐந்து பேரும், திமுக சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேமுதிகவும் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டால் ஓட்டெடுப்பு நடத்தப்படும். தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா எம்.பியைத் தேர்வு செய்ய 34 ஓட்டுக்கள் தேவை.

அதிமுகவிடம் 151
அதிமுகவிடம் தற்போது 151 பேர் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரை தேர்வு செய்யலாம். ஆனால் அதிமுக 5 பேரை நிறுத்தியுள்ளது. 5வது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 19 பேரின் ஆதரவு தேவை. தற்போது அதிமுகவிடம் மிச்சம் உள்ள வாக்குகள் 15 மட்டுமே. எனவே தேவைப்படும் 19 பேரை எப்படி அதிமுக சேகரிக்கப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,.

தேமுதிகவின் 7 எஸ்கேப் ஓட்டுக்கள்
தேமுதிகவை உடைத்து இதுவரை 7 பேர் அதிமுகவுக்கு சாதகமாக திரும்பியுள்ளனர். இவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள். அதாவது அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு இவர்களின் வாக்குகள் போகக் கூடும். எனவே அதிமுகவுக்கு இன்னும் 12 வாக்குகள் தேவை.

5 பேரும் வாக்களிப்பார்களா
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவற்றுக்கு மொத்தமாக 5 பேர் உள்ளனர். இவையும் அதிமுகவுக்குக் கிடைத்தால், அக்கட்சிக்கு மேலும் 7 வாக்குகள் தேவை.

தேமுதிகவை மேலும் உடைக்குமா அதிமுக
இந்த 7 வாக்குகளையும் அதிமுக, தேமுதிகவை உடைத்துப் பெறும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேமுதிகவில் மேலும் பல எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் தாவக் காத்திருப்பதாக பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் கனிமொழி
திமுக தரப்பில் கனிமொழி நிற்கிறார். திமுகவிடம் 23 ஓட்டுக்கள்தான் உள்ளன. எனவே மற்ற கட்சிகளின் தயவு அதற்குத் தேவைப்படுகிறது.

சிபிஐயின் ராஜா
சிபிஐ சார்பில் டி.ராஜா போட்டியிடுகிறார். அக்கட்சியிடமும் வெறும் 18 ஓட்டுக்கள்தான் உள்ளன. எனவே அக்கட்சியும் பிற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறது.

6 இடத்துக்கு 7 பேர் போட்டி
தற்போதைய நிலவரப்படி 6 சீட்களுக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1996க்குப் பிறகு முதல் முறையாக
தமிழகத்தைப் பொறுத்தவரை 1996ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்கெடுப்பே நடைபெறாமல்தான் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். காரணம், யாருமே தங்களது பலத்திற்கு மீறிய வகையில் வேட்பாளர்களை நிறுத்ததால்.

வீம்புக்கு
ஆனால் தற்போது முதல் முறையாக அதிமுக வீம்புக்கு கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் திமுக, சிபிஐ ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

96ல் நடந்த பரபரப்புத் தேர்தல்
1996ல் 7 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. அதில், அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட தளவாய் சுந்தரம், சவுந்திரராஜன், நிறைகுளத்தான், வி.பி.துரைசாமி, ஆர்.கே.குமார், காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்னொரு காங்கிரஸ் வேட்பாளரான உதயபானு தோல்வியடைந்தார்.

எப்படி நடக்கும் தேர்தல்?
தேர்தல் நாளன்று சட்டசபை செயலாளர் அறையில் தேர்தல் நடைபெறும். முன்பு கட்சிகளின் சார்பில் ஓட்டுப்போடும்போது சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஏஜென்டுகளிடம் காட்டிய பிறகுதான் ஓட்டுப்போட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது. அதில் கட்சி மாறி ஓட்டுப்போட்டால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம், அவ்வாறு தெரிந்து கொண்டாலும், எம்எல்ஏக்களின் பதவி பறிபோகாது. அவர்களை கட்சியில் இருந்து நீக்க மட்டுமே முடியும் என்ற விதி இருந்தது. இப்போது அந்த விதிமுறையும் மாற்றப்பட்டுள்ளது. அதில், கட்சி மாறி ஓட்டுப்போட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும்
எனவே தற்போதைய நிலையில் யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.

இரண்டு ஓட்டுப் போடலாம்
இந்த தேர்தலில் இரட்டை ஓட்டுமுறை உள்ளது. அதாவது ஒரு உறுப்பினர், தனக்கு வேண்டிய வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்களின் பெயருக்கு நேராக ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஒரு கட்சிக்கு வெற்றிக்கு தேவையான 34 ஓட்டுக்களை விட அதிகமாக இருந்தால், அந்தக் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், அனைவரும் தனது கட்சியின் வேட்பாளருக்கு நேராக ஒன்று என்று குறிப்பிட வேண்டும். பின் தாங்கள் ஆதரவு கொடுக்க விரும்பும் மற்றொருவருக்கு நேராக 2 என்றும், 3வது விரும்பும் நபருக்கு நேராக 3 என்றும் குறிப்பிடலாம்.

வெல்லப் போவது யார்?
தற்போதைய தேர்தல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளதால் யார் வெல்லப் போகிறார்கள். குறிப்பாக 5 மற்றும் 6 இடங்களைக் கைப்பற்றப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications