பாகிஸ்தானில் லேட்டா தண்ணீர் கொடுத்த பெண் கண்டக்டரை அறைந்த கட்சி தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்தில் தாமதமாக தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பெண் கண்டக்டரை அறைந்ததுடன் அவரை கைது செய்ய வைத்துள்ளார் பஞ்சாப் சட்டசபை உறுப்பினர் ஒருவர்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாகாண சட்டசபை உறுப்பினர் நிகாத் ஷேக். அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்டக்டரான இக்ரா நவாஸிடம் தண்ணீர் கேட்டுள்ளார். இக்ரா தண்ணீர் கொண்டு வர தாமதாமானதால் ஷேக் அவரை அறைந்துள்ளார்.
இதையடுத்து சக பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஷேக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் இக்ரா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேக் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் இக்ராவை கைது செய்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அப்பெண் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications