நிலக்கரி ஊழல்...பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ-ன் அறிக்கையை திருத்தியதாக சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் சிக்கினார். அவரும் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த வினி மகாஜன், ஆஷிஸ் குப்தா ஆகியோரிடம் விளக்கம் பெற வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. இருவரிடமும் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் நிலக்கரி சுரங்க ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை அமைச்சக செயலர் ஹெச்.சி.குப்தாவையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவரிடம் வரும் 20-ந் தேதி விசாரணை நடைபெற இருக்கிறது.
இதேபோல் பிரதமரின் ஆலோசகரான டி.கே.ஏ. நாயரிடமும் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications