ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவின் பலி ஆடுதானா இளங்கோவன்?

ராஜ்யசபா தேர்தலில் திமுக முதலில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. ஆனால் தேமுதிக தரப்போ இந்த முறை எங்களுக்கு ஆதரவு தாருங்கள்..அடுத்த முறை உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று சொல்லி இழுத்தடித்தது. இந்தப் பேச்சுவார்த்தை பலனளிக்காமல் போனது.
இதனிடையே காங்கிரஸின் மூத்த தலைவரான அகமது படேல் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதியன்று திமுக தலைவர் கருணாநிதி மகளை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது கருணாநிதிக்கு சோனியாவின் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்ததுடன் கனிமொழி போட்டியிட்டால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவையும் திமுக கோரியிருந்தது.
இந்நிலையில் புதிய பரபரப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.ராஜா அறிவிக்கப்பட்டார். அவரை அதிமுக ஆதரித்ததுடன் தமது 5வது வேட்பாளரையும் விலக்கிக் கொண்டது. டி.ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவைத் தருவதாக அளித்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிக சார்பிஇல் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிகவைப் பொருத்தவரையில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் அல்லது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோரைத்தான் திமுக ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் வெற்றி உறுதி இல்லை என்ற நிலையில் "ஆடிப்பார்க்கலாம்" என்ற நிலையில் இளங்கோவனை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது.
தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இவர்களில் 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள். தாங்களும் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போயுள்ளனர்.
6வது எம்.பி. இடத்துக்கு தற்போதைய நிலவரப்படி தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி உறுதி என்பது இல்லை. திரிசங்கு நிலைதான். இதனாலேயே பிரேமலதாவையோ சுதீஷையோ வேட்பாளராக்காமல் பொருளாளரும் தலைமை நிலைய பொறுப்பாளருமான இளங்கோவனை இறக்கி ‘ஆட்டத்தை' ஆடி வருகிறது. அதாவது அப்படி இப்படி என வெற்றி பெற்றுவிட்டால் ‘அதிர்ஷ்டம்'! இல்லையெனில் பலி கொடுக்கப்பட்ட ஆடுதான் என்கிற கதையில்தான் இளங்கோவனை களமிறக்கி இருக்கிறதாம் தேமுதிக...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications