வீட்டுச் சாப்பாடு முடிந்தது: இனி, சஞ்சய் தத்துக்கு ஜெயில் சாப்பாடு தான்...

Subscribe to Oneindia Tamil

புனே: புனே யெர்வாடா சிறையில் ஒரு மாதத்தைக் கழித்து விட்ட சஞ்சய் தத்திற்கு, கோர்ட் உத்தரவுப்படி, கொடுக்கப்பட்ட அனைத்து சிறப்பு வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு விட்டனவாம்.

தன் பட வேலைகளுக்கு கோர்ச்ட்டில் அவகாசம் வாங்கிய சஞ்சய் தத் சென்ற மாதம் கோர்ட்டில் சரணடைந்தார். ஆரம்பத்தில் சிறையில் கொஞ்சம் அவதிப்பட்ட அவர், கோர்ட் அனுமதியோடு சில சலுகைகளைப் பெற்றார்.

தற்போது சரியாக ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், கோர்ட் உத்தரவுப்படி பெற்ற சலுகைகளை திரும்ப ஒப்படைத்து விட்டாராம் சஞ்சய். தற்போது, சஞ்சய் தத் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா...?

வாழ்க்கை ஒரு போர்க்களம்...

வாழ்க்கை ஒரு போர்க்களம்...

வாழ்க்கை விசித்திரமானது. பகட்டு கார்களில் வலம் வந்த, பஞ்சு மெத்தையில் துயில் கொண்ட, ஏசி அறையில் பொழுதைக் கழித்த நடிகர் சஞ்சய் தத், படுக்க சரியான பாய் இல்லாமல், வீட்டு உணவில்லாமல் கடந்து சென்ற கடைசி 24 மணி நேரங்களைக் கழித்துள்ளார் என்பதைக் கேட்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத் தானிருக்கிறது.

காற்றிலா அறையில்...

காற்றிலா அறையில்...

லட்சக் கணக்காக 'பேன்'களை அதாவது, ரசிகர்களை கொண்ட சஞ்சய் தத் தற்போது பேன் கூட இல்லாத அறையில் படுத்து தூங்குகிறாராம்.

முதுமையில் சிறை...

முதுமையில் சிறை...

இளமையில் உழைத்து, முதுமைய்யில் சொகுசாக வாழ வேண்டும் என தான் அனைவரும் நினைப்பார்கள், ஆனால் தனது 50வது வயதில் சிறையில் உடல் உபாதைகளுடன் அல்லாடுகிறாராம் சஞ்சய்.

மனைவிக்கு மட்டும் அனுமதி...

மனைவிக்கு மட்டும் அனுமதி...

மாதத்திற்கொருமுறை மனைவியை பார்க்க மட்டும் அனுமதியாம். மற்ற யாருக்கும் அனுமதியில்லை என்பதால், தங்களது அன்பையும், ஆசிர்வாதங்களையும் அவர் மூலமாகவே சஞ்சய் தத்க்கு அனுப்பி வைக்கிறார்களாம் அவரது உறவினர்களும், நண்பர்களும்.

பேப்பர் பை தாயாரிக்கிறார்...

பேப்பர் பை தாயாரிக்கிறார்...

கடின உழைப்பாளியான சஞ்சய், சிறையில் பேப்பர் பை தயாரிக்கிறார். சஞ்சய் இல்லாமல் அவரது வீடே வெறுமையாக இருக்கிறது என சஞ்சயின் நண்பரும், தயாரிப்பாளருமான பண்டி தெரிவித்துள்ளார்.

இனி, சாதாரண கைதி...

இனி, சாதாரண கைதி...

இனி, மற்ற கைதிகளைப் போல் சாதாரண அறையில் படுத்து உறங்க வேண்டுமாம். பருப்பும், சவாலும் தான் இனி அவரது தினசரி உணவு. இப்படியாகத்தான் இனி அவரது மிச்ச சிறைக்காலத்தைக் கழிக்க வேண்டும்.

பட விளம்பரம்..

பட விளம்பரம்..

சஞ்சய் தத் நடித்து விரைவில் வெளியாக உள்ள போலீஸ் கிரி படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. சஞ்சய்தத் விரைவில் சிறையில் இருந்து வெளி வந்து, மீண்டும் படங்களில் நடிப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதற்காக ரசிகர்கள் கையெழுத்து வண்டி ஒன்று ஊர் சுற்றி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+