ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்- மன்மோகன் சிங்
டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உயர்ந்தால் நான் மகிழ்ச்சிஅடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். மக்கள் எங்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பார்கள்.

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, எனது பிரதமர் பதவியை வழங்கி வழிவிட தயாராக இருக்கிறேன். இதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.ராகுல் காந்தி இயற்கையான தலைவர். அந்த இளம் தலைவர், எனது பதவியை அடைவது எனக்கு மகிழ்ச்சிதான். ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழி நடத்திச் செல்வார் என்று நம்புகிறேன். அவருக்கு தலைவருக்கான நல்ல குணங்கள் உள்ளன.
பா.ஜ.க கூட்டணியில் ஏற்பட்ட பிளவு, அந்த கூட்டணியின் உள் விவகாரம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற தலைவர். அரசியலில் நிரந்தர நண்பரோ, நிரந்தர எதிரியோ கிடையாது. எனவே, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதை வரவேற்கிறோம் என்றார் அவர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications