மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் 30 ரவுடிகளுக்கு பயிற்சி அளித்து தமிழகம் முழுவதும் கூலிப்படையாக செயல்பட அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் சமீபகாலமாக புதிய ரவுடிகள் பலர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக இருப்பவர்கள்.
கடந்த ஜனவரி 31ம் தேதி தி.மு.க., பிரமுகர், "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதானவர்களில் ஐந்து பேர், நட்புக்காக ஈடுபட்டவர்கள். மீதமுள்ள பலர் கொலை செய்யத்தான் உடன் செல்கிறோம்' என, அறியாமல், சென்று சிக்கியவர்கள்.அதேசமயம், அவ்வழக்கில் சரணடைந்த சிலர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி, பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளிகள்.
இதேபோல்,சில ரவுடிகளின் கீழ், புதியவர்கள், 30 பேர் ரவுடிகளாக உருவாக்கப்பட்டிருப்பதை, போலீஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த புது ரவுடிகள், கூலிப்படைகளாக, தமிழகம் முழுவதும், செயல்படுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து, ஆய்வு செய்ததில், "சீனியர்களின்' பின்புலத்தை அறியாமல், அவர்களுடன் நட்பாக இருந்து, மது, பணம் என, அதற்கு அடிமையாகி, ரவுடியாக மாறியுள்ளனர்.
இந்த புதுமுக ரவுடிகளை பராமரிக்கும் ரவுடி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர். ஏதேனும் வழக்கில் சிக்கும்போது தான், அவர்களின் பின்னணி குறித்த, தகவல் எங்களுக்கு கிடைக்கிறது. தற்போது, எந்த வழக்கு என்றாலும், புதுமுகங்களாக இருந்தால், அவர்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications