அதிகாலை மெரினாவின் உள்ளத்தை அள்ளும் அழகு....

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதமான கடற்காற்று வீச மெரினா கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி போவதே உற்சாகமான அனுபவம்தான்... விடிந்தும் விடியாத அதிகாலை நேரம்... சொற்பமான ஆட்கள் மட்டுமே நடை பயிற்சியில் இருக்க அந்த அமைதி மனதிற்கு இதம் தரும்.

தினசரி அதிகாலை 5 மணிக்கு எழுந்தால் நிறைய நேரம் கிடைக்கும். எளிமையான உடற்பயிற்சி, கடற்கரை சாலையில் சின்னதாய் ஒரு வாக்கிங் என பதற்றமில்லாமல் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து நிதானமாக செய்யலாம்.

இன்றைக்கு நடைபயிற்சி மேற்கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. சென்னை வாழ் மக்களுக்கு கடற்கரைதான் நடைபயிற்சி செய்ய சிறந்த இடம். அதிகாலையில் அமைதியான மெரினாவைக் காண்பது அழகுதான்... இதே உங்களுக்காக அழகு மெரினாவை கேமராவில் சிறைபிடித்துள்ளோம் நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

லைட் ஹவுஸ்

லைட் ஹவுஸ்

கடற்கரை சாலையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சமாதி வரை நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கு விருப்பமானது. அதிகாலையில் அற்புதமாக ஜொலிக்கும் லைட் ஹவுஸ்.

டிஜிபி ஆபிஸ் பாருங்களேன்

டிஜிபி ஆபிஸ் பாருங்களேன்

காலை நேரங்களில் பரபரப்பாக காணப்படும் டிஜிபி அலுவலகம். அதிகாலையில் அமைதியாய் காட்சியளிக்கிறது.

காந்தி கூட அழகுதான்

காந்தி கூட அழகுதான்

காந்தி சிலை அருகில்தான் அதிகம் கூட்டம் கூடும். அதிகாலையில் யாருமில்லா நேரத்தில் அமைதியாக நின்றிருக்கும் காந்தி.

தியானத்தில் விவேகானந்தர்

தியானத்தில் விவேகானந்தர்

விவேகானந்தர் நினைவு இல்லம் பார்க்கும் போதே மனதில் அமைதி குடியேறும்

எட்டிப் பார்க்கும் சூரியன்

எட்டிப் பார்க்கும் சூரியன்

கிழக்கே பொன்னிறம் எட்டிப்பார்க்க இப்போ வரட்டுமா? இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து வரட்டுமா என கேட்கும் சூரியன்.

சுறுசுறுப்பாகும் கடற்கரை

சுறுசுறுப்பாகும் கடற்கரை

ஒவ்வொருவராய் நடக்க ஆரம்பிக்க சுறுசுறுப்பாகிறது மெரீனா கடற்கரை

அட என்ன அழகு

அட என்ன அழகு

வேலைப் பளுவில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள நேரமில்லாவிட்டாலும் மனதார பேசி சிரிக்க ஏற்ற நேரம் இந்த அதிகாலைதான் ஜோடியாக வாங்கிங் வந்த தம்பதிகள்.

விடிஞ்சிருச்சோ

விடிஞ்சிருச்சோ

வீட்டில் புழுக்கம் தாங்காமல் கடற்கரையில் காற்றாட படுத்த ஜனங்கள். சூரியன் உதிக்கவே வீட்டிற்கு போக மனமில்லாமல் உட்கார்ந்திருக்கின்றனர்.

புறாக்களுக்கு தீனி

புறாக்களுக்கு தீனி

மனிதர்களுக்கு சோறு போடுவதே இங்கே மறைந்து வருகிறது. ஆனால் புறாக்களுக்கும், காகங்களுக்கும் தீனி போட வருகிறது ஒரு கூட்டம். வாழ்க அவர்களின் சேவை மனப்பான்மை.

சுறுசுறுப்பான காந்தி சிலை சாலை

சுறுசுறுப்பான காந்தி சிலை சாலை

அதிகாலையில் அமைதியாய் இருந்த அருகே நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் அதிகாமாகும்.

யோகாவும், சிரிப்பு பயிற்சியும்

யோகாவும், சிரிப்பு பயிற்சியும்

காலை நேரத்தில் யோகா, சிரிப்பு பயிற்சி என பிஸியான மக்கள் கூட்டம்

குத்துச்சண்டை

குத்துச்சண்டை

நடைபயிற்சி ஒருபுறம் இருக்க குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு கூட்டம்.

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

அட பக்கத்திலேயே அம்மா உணவகம் இருக்கே மூலிகை டீ இருக்கா என்று எட்டிப் பார்க்கவே சூடா இட்லி ரெடியா இருக்கு 7 மணிக்கு வாங்க சாப்பிட்டு போங்க என்று அன்போடு அழைத்தனர். குளிச்சிட்டு சாப்பிட வருகிறோம் என்று கூறிவிட்டு அலுவலகம் நினைவுக்கு வரவே வீட்டிற்கு கிளம்பினோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+