இந்தியாவின் கவலையை இலங்கைக்குத் தெரிவிப்போம்- கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக தாங்கள் (கருணாநிதி) எழுதிய கடிதம் கிடைத்தது.
இது இலங்கை நாட்டின் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகள் ஆகும். எனினும், இந்த சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதால் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை பரிசீலித்து, இந்தியாவின் கருத்து இலங்கை அரசுக்குத் தெரிவிக்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் அவர்களுடைய சொந்த நாட்டில் எல்லா உரிமைகளுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.இலங்கையில் தேசிய அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் வாழ இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கையின்படி இலங்கையில் 13-வது அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது இலங்கையில் உள்ள சிங்கள தீவிரவாத கட்சிகள் இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாகத் தலையிட்டு, சட்டம் ரத்து செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் கருணாநிதி.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications