சிங்களப்படையினருக்கு ராணுவப்பயிற்சி அளிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது : திருமா
சென்னை: சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் ராணுவப் பயிற்சி அளிப்பது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இது, தமிழினத்தை சின்னாபின்னமாக சிதைத்த சிங்கள இனவெறி அரசின் செயல்களை ஊக்குவிப்பது போல் உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ உதகையிலுள்ள வெலிங்டன் ராணுவப்பயிற்சி பள்ளியில் கடந்த 7-6-2013 முதல் சிங்கள படையை சார்ந்த இருவருக்கு பயிற்சிளித்து வருகிறது. மேலும் நான்கு பேருக்கு பயிற்சியளிக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதிப்பதாகவே உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் நட்புறவாகவுள்ள நாட்டின் ராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பது வழக்கமான நடைமுறையே என இந்திய அரசு வாதிடுவது,
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தமிழினத்தை சின்னாபின்னமாக சிதைத்த சிங்கள இனவெறி அரசின் போக்கை உலகின் பல்வேறு நாடுகள் வெளிப்படையாக கண்டித்துள்ள நிலையிலும், இந்திய அரசு மட்டும், சிங்களவர்கள் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிப்பதைப் போலவும், ஊக்கப்படுத்துவதைப்போலவும் நடந்துகொள்வது மனிதநேயமற்ற அணுகுமுறையாகவே உள்ளது.
இந்திய அரசின் இத்தகைய சிங்கள ஆதரவு போக்கினை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, சிங்களப்படை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனவும், இனிமேல் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இத்தகைய பயிற்சியளிக்க கூடாது எனவும் விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்துகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications