இந்த பேனில் தொங்கினா சாக மாட்டோமாம்...!
ஜபல்பூர்: தற்கொலை செய்தவற்காக இனிமேல் தூக்குப் போட மின்விசிறிகளை நம்ப முடியாது போலிருக்கிறது. காரணம், தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்த முடியாத அளவுக்கு ஒரு மின்விசிறியைக் கண்டுபிடித்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியர்.
அவரது பெயர் ஆர்.எஸ்.சர்மா. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
இவர் ஒரு நூதனமான மின்விசிறியைக் கண்டுபிடித்துள்ளார். அந்த மின்விசிறி தற்கொலைக்கு எந்த வகையிலும் உதவாது என்று கூறுகிறார் சர்மா.

ஒரு சிறுவனின் மரணத்தைப் பார்த்து
தனது பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பரீட்சையில் தோல்வியுற்றதால் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் சர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதான் தற்கொலைத் தடுபப்பு மின்விசிறியை சர்மா உருவாக்க முக்கியக் காரணமாம்.

ஒரு வாரம் உட்கார்ந்து பலமாக யோசனை
கிட்டத்தட்ட ஒரு வாரம் தீவிரமாக யோசித்து இந்த மின்விசிறியை உருவாக்கினாராம் சர்மா.

கை கொடுத்த வெல்டர்கள், மெக்கானிக்குகள்
பாதுகாப்பான முறையில் மின்விசிறியை உருவாக்கும் அவரது முயற்சிக்கு பல வெல்டர்களும், மெக்கானிக்குகளும் கை கொடுத்தார்களாம். அவர்களுடன் பலமுறை கலந்து பேசி வடிவமைத்தாராம் சர்மா.

என்ன அந்த மாற்றம்
அதாவது மின்விசிறியில் தற்போது உளள்ள இறக்கை மற்றும் மோட்டார் ஆகியவற்றை இணைக்கும் ஷாப்ட் பகுதியில் ஒரு நீண்ட வெற்று மெட்டல் குழாயை இணைத்துள்ளார் சர்மா. அதை பெரிய ஸ்பிரிங் வைத்து இணைத்துள்ளார். மேலும், குறிப்பிட்ட எடைக்கு மேல் அந்த மின்விசிறியில் எடை ஏறினால், அதாவது யாராவது தூக்கு மாட்டிக் கொண்டால், உடனே அந்த மின்விசிறி அப்படியே கீழே இறங்கி விடும். அதாவது கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொள்ளாது.

மக்கள் வரவேற்பு
டாக்டர் சர்மாவின் இந்த நூதன மாற்ரத்திற்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்த ஐடியாவை பெருமளவில் விரிவுபடுத்தும் யோசனையில் தற்போது சர்மா தீவிரமாக உள்ளாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications