"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... "

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.

சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் 2 தோழிகளுடன்

ஒரே நேரத்தில் 2 தோழிகளுடன்

குறிஞ்சிப்பாடியி்ல உள்ள கல்லூரியில் படித்துள்ளார் தினேஷ் பாபு. அப்போது வித்யாவைக் காதலித்துள்ளார். அதேசமயம், வித்யாவின் தோழியான கல்பனாவையும் காதலித்தார். இவர்களில் கல்பனாவை மணக்க நினைத்தார். ஆனால் அவரது வீட்டில் எதிர்ப்பு வரவே வருத்தமடைந்தார்.

அவளை கட்டிக்கோ.. நாமும் சந்தோஷமாக இருக்கலாம்

அவளை கட்டிக்கோ.. நாமும் சந்தோஷமாக இருக்கலாம்

இதையடுத்து கல்பனா இப்படி ஒரு ஐடியா கொடுத்துள்ளார். நீ வித்யாவைத் திருமணம் செய்து கொள். அதேசமயம், நாமும் சந்தோஷமாக இருக்கலாம். அடிக்கடி பார்த்துக்கலாம் என்று கூறியுள்ளார். அதை தினேஷ் பாபு ஏற்று வித்யாவை மணந்தாராம்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்த உறவு

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்த உறவு

இதன்படி திருமணத்திற்குப் பிறகும் கல்பனாவுடன் உறவைத் தொடர்ந்துள்ளார். அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். தனக்குத் திருமணம் ஆன பிறகும் கூட தினேஷ் பாபுவை விடவில்லை கல்பனா. சென்னைக்கு அடிக்கடி வரவழைத்து சந்தோஷமாக இருந்துள்ளார்.

"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்"!

இதுகுறித்து தினேஷ் பாபு சங்கடப்பட்டு ஒருமுறை கல்பனாவிடம் கேட்டபோது, பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ். உன்னை எப்போதும் மறக்க முடியாது என்று சமாதானப்படுத்தி விட்டாராம்.

3 காதலர்கள்

3 காதலர்கள்

கல்பனாவுக்கு மொத்தம் 3 காதலர்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவர் தினேஷ். இன்னொருவர் வெளிநாட்டில் இருக்கிறார். 3வதாக ஒருவர் உள்ளூரிலேயே இருக்கிறாராம். ஆனால் அதுகுறித்து தினேஷுக்குத் தெரிய வந்ததும் ஆள் வைத்து அந்த நபரை அடித்து விரட்டி விட்டாராம்.

"கரண்ட் அபயர்ஸ்..."

எனவே இப்போதைக்கு தினேஷ் குமாருடன் மட்டுமே உறவைத் தொடர்ந்து வந்தாராம் கல்பனா.

தினேஷுக்குத் தாராளம்.. கணவருக்கு புறமுதுகு

தினேஷுக்குத் தாராளம்.. கணவருக்கு புறமுதுகு

தினேஷுடன் மட்டும் தனது உறவை தாராளமாக பகிர்ந்து வந்த கல்பனா, கட்டிய கணவரை பட்டினி போட்டு வைத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக கணவரை தன் பக்கமே அண்ட விடவில்லையாம் அவர். ஏதாவது காரணம் சொல்லி கணவரை அருகே வர விடாமல் தடுத்தாராம். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தினேஷை வரவழைத்து சந்தோஷமடைந்துள்ளார்.

கொஞ்சமும் வருத்தமில்லை

கொஞ்சமும் வருத்தமில்லை

கணவரைக் கொன்றதற்காக கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் சிறையில் இருக்கிறாராம் கல்பனா. போலீஸார் கேட்ட கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும், பதட்டமும் இல்லாமல் பதிலளித்தாராம்.

பாவம் சீனிவாசன்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+