ராகுல் பிறந்தநாளை ‘பொது மக்கள் சேவை தினமாக’ கொண்டாடிய தமிழக காங்கிரஸார்...
சென்னை: இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 42வது பிறந்த நாள். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ராகுலின் பிறந்தநாளை ‘பொதுமக்கள் சேவை தினம்' ஆக கொண்டாடி வருகின்றனர் தமிழக காங்கிரஸார்.
மருத்துவ முகாம்:
இன்று சத்தியமூர்த்தி பவனில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அம்மருத்துவ முகாமில் வெவ்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் மற்றும் ஹாமியோபதி யுனானி மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் நோய்களுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வளித்தனர். மருத்துவ முகாமில் முக்கியமாக இதய நோய், சர்க்கரை நோய், கண் குறைபாடுகள், மூட்டுவலிகள் உள்பட அனைத்து விதமான வியாதிகளுக்கு சிகிச்சை தரப்பட்டது.
மருத்துவ முகாமை காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைக்க, நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி ஆரூண், விசுவநாதன், விஜயதாரணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் சக்தி வடிவேல், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சைதை ரவி, கோபண்ணா, சிரஞ்சீவி, ஜி.ஆர்.வெங்கடேஷ், வில்லிவாக்கம் சுரேஷ், பிஜூ சாக்கோ இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாசே ராஜேஷ், கவுன்சிலர் பி.வி.தமிழ்ச்செல்வன், நாச்சிகுளம் சரவணன், சாத்தூர் பாஸ்கரன், ஜவகர் பாபு, கவுன்சிலர் தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்னதானம்:
மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
சிறப்புப்பூஜை:
ஆலந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில், நகர பொருளாளர் என்.சீத்தாபதி தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். பின்னர் அருகிலுள்ள சிவன் கோவிலில் ராகுலின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், அனல்சிட்டி பாபு, இரா. ஜெகநாதன், என்.கண்ணன், எஸ்.சேகர், பழனிசாமி, தண்டபாணி, லயன் காமராஜ், ஜோசப், ஜெ.உதயகுமார், ஏ.கணேசன், அமுதகுமாரி, லட்சுமி கலந்து கொண்டனர்.
தங்க மோதிரம் பரிசு:
எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு ராகுல் காந்தி மக்கள் சேவகர் பேரவை சார்பில் பேரவையின் தலைமை சேவகரும் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருமான ஜி.பி.மோகன் காந்தி, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர், ஓட்டேரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள், ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்றவை வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவில், காங்கிரஸ் நிர்வாகிகள் புரசை பெருமாள், சூளை தா.பிரகாசம், பி.கணபதி, டி.வி. ரியாஸ், சதீஷ், சரவணன், அருண்குமார், நீலமோகன், இரா. சங்கர், கோகுல் முருகேசன், மனோகரன், சௌந்தர்ராஜன், அசோக் குமார், கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
தரமணியில் நடைபெற்ற விழாவில் தரமணி மணி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications