பற்றி எரிந்த காதல் ‘தீ’: பலியான காதல் ஜோடிகள்: ஸ்ரீபெரும்புதூரில் பரிதாபம்
ஸ்ரீபெரும்புதூர்: உடலில் தீ வைத்துக் கொண்ட காதலன், தனது 13 வயது காதலியையும் கட்டிப் பிடித்ததால், தீயின் கோர நாக்குகளுக்கு இருவரும் பலியாயினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வி.ஆர்.பி. சத்திரத்தை சேர்ந்த மேகநாதன், பேல் பூரி கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தினக்கூலியாக வேலை பார்த்து வரும் மோகன் என்ற இளைஞர், மேகநாதனின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளார்.
மோகனின் காதலுக்கு சம்மதம் சொன்ன ஐஸ்வர்யா, பெற்றோரை எதிர்த்து இருமுறை காதலனுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். ஆனால், ஏனோ திரும்பி சில தினங்களிலேயே வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மேகநாதன் மகளைக் கடத்தியதாக மோகன் மீது போலீசில் புகார் செய்தார்.
விசாரணைக்காக மகளை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் சென்று கொண்டிருந்த மேகநாதனை வழிமறித்த மோகன், கையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். உடலில் பற்றி எரிந்த தீயுடன் திடீரென காதலி ஐஸ்வர்யாவைக் கட்டிப் பிடித்தார் மோகன்.
காதல் ஜோடிகள் தீயில் கருகினர். இருவரையும் உறவினர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்றிரவே, மோகன் பலியானார். சிகிச்சை பலனின்றி மோகன் இறந்த 5 தினங்களுக்குப் பிறகு நேற்று ஐஸ்வர்யாவும் பரிதாபமாக இறந்தார்.
இளம் காதல் ஜோடிகள், தெருவில் தீ வைத்துக் கொண்டு பலியான சம்பவத்தால், அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications