சிங்களர்களின் லண்டன் வெறி.. ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
லண்டன்: லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்களர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து தமிழ் இளையோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
அப்போது, இலங்கை அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்த கவனியீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது காவல்துறையினரையும் தாண்டி சிங்கள காடையர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலின் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்ட சிறுமியை காலால் எட்டி உதைத்தும் சிறுவனை அடித்தும் மேலும் அங்கு நின்றவர்களை பலமாக தாக்கியும் உள்ளனர். மற்றும் சிங்கள காடையர்களால் அநாகரிகமான வார்த்தைகளால் பேசியும் சைகை மூலமாக காட்டியும் சென்றுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி அடிமைப்படுத்தவும் எமது நிலங்களை பறித்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும் இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை காட்டி எகத்தாளம் இடுகிறது.
இவ்வேளையில் தமிழ் இளையோர் அமைப்பு சிங்கள காடையர்களின் இனவெறியை வன்மையாக கண்டிக்கும் நேரத்தில் லண்டன் காவல் துறையினரிடம் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டியும். இலங்கையைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அதிகமான மக்களை பங்கு கொள்ளுமாறும் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications