லோக்சபா தேர்தல் வியூகம்... எதியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் மோடி!

Subscribe to Oneindia Tamil

LS polls: Modi will meet yeddyurappa?
கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சியில் சலசலப்பு எழுந்த போதும் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீட்டினால் சமாதானப்படுத்தப்பட்டன. பின்னர் டெல்லி சென்ற மோடி, பாஜகவின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமையகத்துக்கு நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்ல இருக்கிறார். அப்போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா தளத்தின் தலைவருமான எதியூரப்பாவை நேரில் சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்புக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

எதியூரப்பா சந்திப்பு ஏன்?

தென்னிந்தியாவிலேயே பாஜகவை முதன் முதலில் மாநில ஆட்சியைக் கைப்பற்ற வைத்தவர் எதியூரப்பா. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தாலும் கூட அது உட்கட்சி மோதல்களால் சிதைந்து போனது. அண்மையில் முடிவடைந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அக்கட்சியிலிருந்து வெளியேறிய எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம், ஸ்ரீராமுலு கட்சி மூன்றாக சிதைந்து போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சி எளிதாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. லோக்சபா தேர்தலை பாஜக, நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்வதால் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடியின் நண்பரான அமித்ஷா தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.

எதியூரப்பாவுடன் உடன்பாடு

இதேபோல்தான் லோக்சபா தேர்தலுக்காக நாக்பூரில் எதியூரப்பா- மோடி சந்திப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக் கொடுத்து தேர்தலை எதிர்கொள்வது என்ற உடன்பாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+