வடமாநில வெள்ளம் வரலாறு காணாத பேரழிவு... ஆயிரக்கணக்கானோர் சேற்றில் சிக்கில் பலி
கேதார்நாத்: உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது பருவமழையின் போது பெய்யும் மழையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்த மழை வெள்ளத்தால் ஏராளமான பகுதிகள் மூழ்கியுள்ளன ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
உத்தரகாண்டில் 200 கார்கள் 2 மண் அள்ளும் பிரம்மாண்ட இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. காரையோரம் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஹெலிகாப்டரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் தவிப்பு
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு லட்சம் பக்தர்கள் சாலைகள் சேதம் அடைந்ததால் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். பொதுமக்களும் பல இடங்களில் வெள்ளத்துக்கு இடையே சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவற்றின் மூலம் உணவு பொட்டலங்கள், உணவு பொருட்கள் போடப்படுகின்றன.

சேற்றில் சிக்கி பலி
இம்மாநிலத்தில் மட்டும் மழை, வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள். வெள்ளம், நிலச்சரிவால் கூட்டம் கூட்டமாக சேற்றில் புதைந்து இவர்கள் இறந்துள்ளனர். புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர். கடந்த 3 நாட்களுக்கும் கொட்டித்தீர்த்த மழை, நேற்று சற்று ஓய்ந்தது. வெப்பநிலையும் சாதகமாக இருந்ததால், மீட்பு பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டன. வெள்ளத்தில் இக்கோயில் முழுமையாக மூழ்கி விட்டது.

6ஆயிரம் பக்தர்கள்
இக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கு 6 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். உத்தரகாண்ட் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெள்ளத்தாலும், நிலச் சரிவாலும் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் புனித யாத்திரை சென்றவர்கள்.

வரலாறு காணாத பேரழிவு
உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ‘‘இமயமலை சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பலி எண்ணிக்கையை பற்றி சரியாக கூற முடியாது'' என்றார்.

கோவில் சேதமில்லை
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று மாலை முதல்வர் விஜய் பகுகுணா சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கேதர்நாத் கோயிலை வெள்ளத்தால் ஏற்பட்ட சேறும், குப்பை கூளங்களும் மூடியுள்ளன. அவற்றை சீர்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தபட்சம் ஓராண்டாகும். அதுவரை பக்தர்கள் அங்கு செல்வது கடினம்'' என்று கூறினார்.

தொலைக்காட்சி குழுவினர் மீட்பு
இமாச்சல பிரதேசத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும், நிருபர்களும் நிலச்சரிவால் பூ என்ற இடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அரியானா , உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் கத்திமா , பானிபட் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது. சாலையை சீரமைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications