ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி?

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இடத்துக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் களத்தில் இருக்கின்றனர்.
திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இதனால் திமுகவுக்கு தற்போதைய ஆதரவு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கனிமொழியையே பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. அப்படியான ஒருநிலையில் கனிமொழிக்கான ஆதரவு 28ஆக இருக்கும்.
தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் ஆதரிககக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காங்கிரஸ் கட்சியானது ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரிக்கலாம் என்று வாதிடப்படுகிறது. அப்படியே காங்கிரஸ் ஆதரிக்கும் போது 22+5= 27 என்ற ஒரு நிலை உருவாகலாம்.
இந்தச் சூழலில் கனிமொழி வெல்ல வேண்டுமா? தேமுதிகவின் இளங்கோவனை ஜெயிக்க வைத்து ‘அதிருப்தி' எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்வதா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் ஜெயலலிதாவே இருக்கிறார்...ஏனெனில் அவர் வசம் 7 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கனிமொழி ஜெயிப்பதால் தமக்கு ஒரு பயனும் இல்லை. .ஆனால் தேமுதிகவின் வேட்பாளரை ஜெயிக்க வைத்து ஒரு அதிருப்தி எம்.பி.யை உருவாக்கி வைப்பதால் தமக்கு லாபம் என ஜெயலலிதா கருதினால் அந்த 7 தேமுதிக அதிருப்தி வேட்பாளர்களையும் தேமுதிக வேட்பாளருக்கே வாக்களிக்க சொன்னால் இளங்கோவன் வெற்றி பெற்றுவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
ஆக கனிமொழி வெல்லப் போவது ஜெயலலிதாவின் கையில்!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications