சென்னை முகப்பேரில் பரிதாபம்: லாரி மோதி6 ம் வகுப்பு மாணவி மரணம்...
சென்னை: சென்னை முகப்பேரில் லாரி மோதி 6ம் வகுப்பு பள்ளி மாணவி பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அபிராமி (11). இவர் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அபிராமி தனது சைக்கிளில் புதன்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அவர் மோகன்ராம் நகர் சாலையில் வந்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி அபிராமி மீது மோதிது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அபிராமியை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அபிராமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஒப்பந்த முறையில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக லாரியின் டிரைவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி (44) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த அபிராமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
மாணவியின் மரணத்தை அடுத்து முகப்பேர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, மாலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்களை இயக்கக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. காவல்துறை அதிகாரிகள் சமாதானம் பேசியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications