கள்ளக்காதல் முறிவு.. உறவுக்கு வற்புறுத்திய கொழுந்தன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற பெண்
பென்னாகரம்: கள்ளக்காதலை முடித்துக் கொள்ள விரும்பினார் ஒரு பெண். ஆனால் அவருடன் தொடர்பு வைத்திருந்த அவரது கணவரின் தம்பி, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் தலையில்கல்லைப் போட்டுக் கொன்று விட்டார்.
பென்னாகரம் அருகே உள்ளது அத்திமரத்தூர் காட்டுவளவு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி ஆவார். இவரது அண்ணன் மனைவி மாதாம்பூ.
முருகேசனுக்கும், மாதாம்பூவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாம். இந்த நிலையில் மாதம்பூ தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்குப் பின்னர், கொழுந்தனுடன் உறவைத் தொடர சங்கடப்பட்டு விலக ஆரம்பித்துள்ளார் மாதாம்பூ. ஆனால் முருகசேன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த மாதாம்பூ, சில நாட்களுக்கு முன்பு முருகேசனை சின்னம்பள்ளி கிராமத்திற்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு மது வாங்கிக் கொடுத்தார். முருகேசன் குடித்தார். போதை ஏறியது. பின்னர் அவரை அருகில் உள்ள மலைப் பகுதிக்குக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து முருகேசன் தலையில் பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விட்டார்.
முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஹாயாக தனது வீட்டுக்குப் போய் விட்டார் மாதாம்பூ. போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்தது. அன் பின்னர் மாதாம்பூவைக் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications