உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்: ஜக்கையன்
டேராடூன்: உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக டேராடூன் சென்றுள்ள தமிழகக் குழுவின் தலைவரும் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியுமான எஸ்.டி.கே.ஜக்கையன் தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த் துறை ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட உயர்நிலைக் குழு நேற்று டேராடூனுக்கு சென்றது.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கையன், ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் டெல்லியில் உள்ள தமிழக அரசின் அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசு முழு ஒஅத்துழைப்பு கொடுத்து வருகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த 15 பேரை தேடும் பணி நடைபெறுகிறது.கோவை, வேலூரைச் சேர்ந்த 40 பேர் இந்திய சீன எல்லையான காளா ராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications